ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டரின் துணையோடு புதையல் தேடியலைந்த ஒருவருக்கு 5 கிலோ தங்கக் கட்டி கிடைத்துள்ளது. சுமார் ஐந்தரை கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டியின் விலை 3 லட்சம் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதுவரை பெயர் வெளியிடப்படாத ஒரு நபர், விக்டோரியா மாகாணத்தில் பாலார்ட் என்ற நகருக்கருகே கையில் எடுத்துப் போகக் கூடிய மெட்டல் டிடெக்டர் மூலம் நடத்திய தேடுதலின் போது தரைக்குக் கீழே இரண்டடி ஆழத்தில் ஒரு உலோகக் கட்டி இருப்பதை ''பீப்'' ஒலி உணர்த்தியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் சூடுபிடித்த தங்க வேட்டையின் போது, இந்த இடம் தங்கம் தேடுவோர் மத்தியில் பிரபலமாக இருந்ததது. சமீப காலத்தில் இங்கு எடுக்கப்பட்ட மிகப் பெரிய தங்கக் கட்டி இதுதான் என்று உள்ளூர் நிபுணர்கள் கூறுகின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment