விஸ்வரூபம் படம் திரையிடப்பட முடியாமல் போனதால் நடிகர் கமலஹாசன், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் இந்த படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன வினியோகஸ்தர் ராஜேஸ் தடானி தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபத்தால் இழப்பு அதிகரித்துள்ளதாக கர்நாடக வினியோகஸ்தர் சங்கராஜு மற்றும் ஆந்திரா மாநில வினியோகஸ்தர் பிரகாஷ்ரெட்டி தெரிவித்தனர்.
விஸ்வரூபம் படத்தை முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உலகம் முழுவதும் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். தடை காரணமாக படம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சில நகரங்களில் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையை விட குறைவான தொகையே திரும்ப கிடைத்தது.
அந்த வகையில் ரசிகர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
லண்டனில் வரவேற்பு
ஆனால் அமெரிக்காவில் விஸ்வரூபம் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களில் ரூ 2 கோடி வரை வசூல் கிடைத்ததாக தெரிகிறது.
லண்டன் திரையரங்கங்களில் விஸ்வரூபம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் பிரிட்டிஷ் நகர திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் ரூ.57 லட்சம் வசூல் செய்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment