Search This Blog n

02 January 2013

ஜஸ்டினின் காரை பின்தொடர்ந்த நபர் பரிதாபமாக பலி



 
அமெரிக்க பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரை, பின்தொடர்ந்து சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்க பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர்(வயது 18). இவரது கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, புகைப்படம் எடுப்பதற்காக நபரொருவர் பின் தொடர்ந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், பொப் இசை பாடகர் ஜஸ்டின் பீபரின் கார் வேகமாக பயணித்து கொண்டிருந்தது.
அவருக்கு பின்னே மற்றொரு காரில் ஒருவர் தொடர்ந்து வந்தார். போக்குவரத்து சிக்னலில் பீபரின் கார் நின்றபோது, பின் தொடர்ந்தவர் தனது காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பெராரி காரை படம் பிடித்தார்.
அதன் பின் தனது காருக்கு திரும்பினார். ஆனால் எதிர்பாராதவிதமாக மற்றொரு கார் மோதியதில் கீழே விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பீபர், இந்த சம்பவத்தின் போது நான் அங்கு இல்லாத நிலையிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்இச்சம்பவத்தின் மூலம்புதிதாக சட்டங்கள் இயற்றப்படுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்{காணொளிபுகைபடங்கள்}.

.

0 கருத்துகள்:

Post a Comment