மாவோயிஸ்டுகளுக்கு நவீன ரக துப்பாக்கிகளைக் கையாள பிலிப்பைன்ஸிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் பயிற்சி அளித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. |
இதுகுறித்து உளவுத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியாகி உள்ளதாவது:
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிப் படை தடை செய்யப்பட்ட ஒரு
அமைப்பாகும். இந்த அமைப்பினர் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கியதுடன், அவற்றை கையாள்வதற்கான பயிற்சியையும் அளித்துள்ளனர். இந்த ஆயுதங்கள் எங்கிருந்து வழங்கப்பட்டன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment