மாணவியும் குற்றவாளிதான். குஜராத் சாமியாரின் சர்ச்சை கருத்து. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
"டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண், அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், சட்டத்தை தவ்றாக பயன்படுத்தக்கூடாது என்றும், சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம்...வரதட்சணை வழக்கு அதற்கு மிகப்பெரிய உதாரணம் என்று மேலும் கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் பிரச்னையே வராது என்றும், ஆண் வேலைக்கு செல்ல வேண்டும்;பெண் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது நேற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ,தற்போது புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
Post a Comment