Search This Blog n

07 January 2013

9 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை மீன்!



ஜப்பானில் உள்ள சுகிஜி மீன் மார்கெட்டில் தினந்தோறும் பல மில்லியன் டொலருக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புகழ் பெற்ற இந்த மார்க்கெட்டில் இந்த ஆண்டிற்கான முதலாவது மீன் ஏலம் இன்று விடப்பட்டது.


அப்போது 222 கிலோ எடையுள்ள ஒரு புளுபின் ட்யூனா வகை மீன் ஏலத்திற்கு வந்தது. இந்த ஆண்டின் முதலாவது ஏலம் என்பதால் அதை எடுப்பதற்கு கடும் போட்டி நிலவியது.

இதில் அந்த மீன் 155 மில்லியன் யென்னுக்கு (இந்திய மதிப்பபு சுமார் 9 கோடியே 20 லட்சம் ரூபாய்) ஏலம் போனது. ஜப்பானில் இந்த புளுபின் ட்யூனா வகை மீன்கள் பெரும்பாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

ஒரு கிலோ எடையுள்ள இந்த மீனின் விலை சுமார் 7600 டொலருக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு முதலாவது ஏலம் எடுத்த தொகையான 55 மில்லியன் யென்னை காட்டிலும், இது இருமடங்கு அதிகம் என்று ஏலம் எடுத்தவர் கூறினார்.{காணொளி, புகைபடங்கள்,}

0 கருத்துகள்:

Post a Comment