காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான பனி பெய்து வருகிறது. உறை நிலையான பூஜ்ஜியம் டிகிரியையும் தாண்டி, சில மாவட்டங்களில் நேற்றைய தட்பவெப்ப நிலை மைனஸ் 6 டிகிரி ஆக நீடித்தது. ரத்த ஓட்டத்தை உறைய வைக்கக்கூடிய கடும் குளிரில் ஏராளமான மக்கள் சிக்கித் தவித்தனர். |
இந்திய விமானப்படையின் கமாண்டர் பி.பாட்டன்கே மற்றும் ஜம்மு வட்டார கமாண்டர்
பிரதீப் குப்தா மேற்பார்வையில், பாதிக்கப்பட்ட மக்கள் விமானம் மூலமாக அப்பகுதியில்
இருந்து நேற்று வெளியேற்றப்பட்டனர். அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்ட கிஷ்ட்வார் மாவட்டத்தின் நவபஞ்சி, சொன்டார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150 பேர், எம்-17 ரக ஹெலிகாப்டர்களின் உதவியுடன் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். |
0 கருத்துகள்:
Post a Comment