ஆபாசப் படங்களில் நடிக்கும்போது நடிகர்கள் ஆணுறை அணிந்திருப்பதைக் கட்டாயமாக்கும் லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவின் ஆபாசப் பட தாயாரிப்பு நிறுவனங்கள் இரண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.
அமெரிக்க அரசியல் சாசனத்திலே உத்திரவாதம் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை மீறுவதாக இந்த கட்டுப்பாடு அமைந்துள்ளதென விவிட் எண்டர்டெய்ண்மெண்ட், கலீஃபா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்களும் கூறுகின்றன.
மெஷர் பி என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த நிபந்தனைக்கு கடந்த நவம்பரில் லாஸ் ஏஞ்சலிஸ் வாக்காளர்கள் ஆதரவளித்து வாக்களித்திருந்தனர்.
ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்களை ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனைக்கு எய்ட்ஸ் ஹெல்த்கேர் ஃபவுண்டேஷன் எனப்படும் எய்ட்ஸ் தடுப்பு அறக்கட்டளை ஆதரித்திருந்தது
ஆபாசப் படங்கள் தொழில்துறையில், நடிகர்களுக்கான மருத்துவ சோதனை நடைமுறை எல்லாம் நல்ல விதமாக பலனளித்து வருகின்ற வேளையில், ஆணுறை அணிவது கட்டாயம் என்று நிபந்தனை விதிப்பது அனாவசியமானது என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக விவிட் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் தோற்றுநர் ஸ்டீவன் ஹெர்ஷ் தெரிவித்துள்ளார்ஆபாசப் படங்களின் முன்னணி நடிகைகளான கெய்டன் கிராஸ், லோகன் பியர்ஸ் ஆகியோரும் ஆணுறையைக் கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்க்கின்ற நடவடிக்கையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
நடிகர்கள் ஆணுறை அணிந்துகொண்டு உடலுறவுக் காட்சிகளில் நடிப்பார்கள் என்ற நிபந்தனைக்கு உட்பட்டால்தான், ஆபாசப் படமெடுக்க உரிமம் தரப்படும் என லாஸ் ஏஞ்சலிஸ் மாவட்ட நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட உத்தரவுச் சட்டம் அமைந்துள்ளது
இந்த நிபந்தனையின் காரணமாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து தமது தொழில் நடவடிக்கைகளை வெளியே கொண்டு செல்ல நேரிடும் என ஆபாசப் படத் தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன
ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவு வைத்துக்கொள்பவர்களை படத்திலே பார்க்க பெரும்பாலான ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என பிரிட்டிஷ் ஆபாசப்பட நடிகை கீரன் லீ குறிப்பிடுகிறார்.
அமெரிக்காவில் எல்லா மாகாணங்களிலும் வைத்து ஆபாசப் படம் தயாரிக்க முடியாது. காரணம் அப்படிப் படமெடுப்பவர்கள் மீது விபச்சார ஒழிப்பு சட்டங்கள் பாயும். ஆனால் கலிஃபோர்னியாவிலும், நியூ ஹாம்ப்ஷைர் ஆகிய இரண்டு மாநிலங்களில்தான் ஆபாசப் படம் எடுப்பவர்கள் மீது இந்த சட்டம் பாயாது.
எனவே லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் ஆபாசப் படங்களின் தலைமையகமாவே திகழ்கிறது என்று சொல்லலாம்.
0 கருத்துகள்:
Post a Comment