சென்னை மாவட்டம் நந்தம்பாக்கம் பட்ரோடு துளசிங்கபுரத்தில் உள்ள கூத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரன், கார் டிரைவராக உள்ளார்.
இவரது மகன் பாலாஜி (வயது 8). தனசேகரனின் அக்காள் மாலதி மகன் லத்தீப் (8). கடந்த 20ம்திகதி வீட்டு முன்பு விளையாடிய சிறுவர்கள் பாலாஜி, லத்தீப் இருவரும் மாயமானார்கள். அவர்கள் இருவரும் துளசிங்கபுரம் - நந்தம்பாக்கம் பொலிஸ் நிலையம் இடையே உள்ள புள்ளுக்கோவில் அருகே பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தனர்.
பொலிசார் 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினார்கள். முதலில் சிறுவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் சிறுவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு சென்று விளையாட வாய்பில்லை என்பதால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழும்பியது.
சிறுவர்கள் பிணமாக கிடந்த கிணற்றின் அருகே எலுமிச்சம் பழம், மது பாட்டில்கள், பூஜை பொருட்கள் கிடந்தன. எனவே சிறுவர்கள் நரபலிக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதியில் தகவல் பரவியது.
இதையடுத்து சிறுவர்கள் இறப்பதற்கு முன்பு கடைசியில் யாருடன் சென்றார்கள் என்பது பற்றி பொலிசார் விசாரித்தனர். அப்போது உறவுப் பெண் ஒருவர் சிறுவர்கள் பாலாஜி, லத்தீப் இருவரையும் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதை பாலாஜியின் தந்தை தனசேகரன் தெரிவித்தார். அந்த உறவுப் பெண் சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.
அந்த பெண்ணின் உறவினர்களுக்கு மாந்திரீகம் தெரியும். எனவே நரபலிக்காக சிறுவர்களை கொன்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது
0 கருத்துகள்:
Post a Comment