Search This Blog n

07 September 2013

பாடசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 மாணவிகள்



திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகள் 5 பேர் பெற்றோர்களுக்கு சொல்லாமல் மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றதால், அவர்களைக் காணவில்லை என பெற்றோர்களும், ஆசிரியர்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசி (15), கார்த்திகா (15), மப்பேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரீத்தா (15), இருளஞ்சேரியைச் சேர்ந்த சர்மிளா (16), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (15) ஆகியோர் கீழச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை ஆசிரியர் தினம் என்பதால் பள்ளியில் விழா நடைபெற்றது. விழா முடிந்த பின்னர் 5 மாணவிகளும் வீட்டுக்குச் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளை பல இடங்களில் தேடினர்.

இது குறித்து மப்பேடு பொலிஸ் நிலையதில் புகார் கொடுத்தனர்.
பொலிஸ் விசாரணையில், அம்மாணவிகள், சென்னை மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு 10.30 மணியளவில் சென்ட்ரல் வந்து அரக்கோணம் ரயில் ஏறி ஊருக்கு வந்தனர்.

அந்த மாணவிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்த போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

0 கருத்துகள்:

Post a Comment