Search This Blog n

25 September 2013

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள் மோதல் : போலீஸ் துப்பாக்கி சூடு


 புதுச்சேரியில் கட்சிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பா.ம.க.வினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

புதுச்சேரி அடுத்து பண்டசோழநல்லூரில் பா.ம.க. சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதனை சமூக விரோதிகள் இன்று காலை கிழித்து விட்டனர். இதனால் கொதிப்படைந்த பா.ம.க.வினர் திரண்டு கரியமாணிக்கம்-

 பண்டசோழநல்லூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் போது அந்த பகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனரை கிழித்தனர். இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை கோபப்படுத்தியது. பா.ம.க

தொண்டர்கள் கலைந்து சென்ற சில மணி நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகி கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 6 முறை சுட்டனர். இதன் பிறகு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

0 கருத்துகள்:

Post a Comment