மதகுருவான அசாராம் பாபுவிடம் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த ஒருவர் அவரின் ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
மதகுருவானா அசாராம் பாபு மீது 16 வயது சிறுமி பாலியல் புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் 15 ஆண்டுகளாக தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அம்ருத் பிரஜபதி பல்வேறு ரகசியங்களை தெரிவித்துள்ளார்.
அம்ருத் பிரஜபதி கடந்த 1986ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
அசாராம் பாபு குறித்து அம்ருத் கூறுகையில், நான் வரும் முன்பு ஆசாராம் பாபு தனது ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட சூரங்களை முறையான உரிமம் இன்றி விற்பணனை செய்து வந்தார்.
அவர் மோதேரா ஆற்றங்கரை அருகே சிறிய குடில் அமைத்து அங்கு தான் இருந்தார். பின்பு அந்த இடத்தில் ஆசிரமம் கட்டப்பட்டது என்று பிரஜபதி தெரிவித்துள்ளார்.
தற்போது அசாராம் பாபுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மொத்தம் 400 ஆசிரமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
80களில் ஆசாராம் பாபுவை பார்க்க 200 பேர் கூட வந்ததில்லை.
என் தொழில்நுட்ப உதவியால் அவர் தனது ஆயுர்வேத மார்க்கெட்டை விரிவுபடுத்தி பல்வேறு தயாரிப்புகளை தனது ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்தார்.
ஒரு நாள் ஆசாராம் பாபுவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரை பார்க்க அவரது அறைக்கு சென்றேன்.
அவரது பாதுகாவலர்களுக்கு என்னை நன்றாக தெரியும் என்பதால் என்னை அறைக்குள் செல்ல அனுமதித்தனர்.
உள்ளே சென்றபோது அங்கு அசாராம் தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 25 வயது பெண்ணுடன் தவறான முறையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்துவிட்டேன்.
அதன் பின்பே அங்கிருந்து வெளியேறினேன் என்று அம்ருத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment