Search This Blog n

30 September 2013

குடியிருப்பில் சிக்கிய 42 பேர் சடலங்களாக மீட்பு! -

 
 
மும்பையில் நேற்றுக் காலை 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.தெற்கு மும்பையில் மஷ்கான் என்ற இடத்தில் உள்ள இந்தக் கட்டடம் பிரிஹன் மும்பை மாநகராட்சிக்குச்

சொந்தமானது. இதில் 21 குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.30 ஆண்டு பழமையான இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.
   
விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றது. மீட்கப்பட்ட 48 பேர் ஜெஜெ மருத்துவமனை மற்றும் நாயர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்கக் கூடும் எனவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது பழமையான கட்டடம்தான் ஆனால் முற்றிலும் பயன்படுத்த முடியாமல் போன கட்டடம் இல்லை.கட்டட ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.4 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் மாநகராட்சியில் மார்க்கெட்துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கானது. இந்த கட்டடம் லேசாக

விரிசல் விடுவதையும், குலுங்குவதையும் கண்டு உடனடியாக வெளியேறிவர்கள் தப்பியுள்ளனர். காலை 6 மணியளவில் இடிந்த காரணத்தால் பெரும்பாலானவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ள நேரிட்டது
 

0 கருத்துகள்:

Post a Comment