Search This Blog n

08 September 2013

மகளுக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் தாய் ஓட்டம்



தமிழகத்தின் பள்ளிக்கரணை சத்தியா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வசந்தா (35). இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். 

இவர்களது மகளுக்கும், திண்டிவனத்தை சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதனால் அவர் வருங்கால மனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்தார். அப்போது வசந்தாவுடன் பார்த்தசாரதி சகஜமாக பேசி பழகினார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

வருங்கால மனைவியை பார்ப்பது போல் வசந்தாவுடன் உறவை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக திடீரென வசந்தா மாயமானார்.

இது குறித்து சேகர் பள்ளிக்கரணை பொலிசில் புகார் செய்தார். விசாரணையில் நிச்சயம் செய்திருந்த மாப்பிள்ளை பார்த்தசாரதியுடன் வசந்தா ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி அறிந்ததும் புதுப்பெண் அதிர்ச்சியில் உள்ளார். இச்சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்துகள்:

Post a Comment