ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முதல் ஆந்திர மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆந்திரா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்துத், தனி தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, சீமாந்திரா, ராயல சீமா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகிறது. அரசு ஊழியர்களுடன் தற்போது மின் துறை ஊழியர்களும் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஆந்திராவின் 3 மின் தொகுப்புக்களிலும் வேலை பாதிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளதால், ஆந்திராவில் நேற்றும் இன்றும் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை. மேலும் ஆந்திரா முழுவதும் இருளில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
0 கருத்துகள்:
Post a Comment