Search This Blog n

16 September 2013

இந்திய எல்லையில் இன்று காலை ..

 .. 

இந்திய எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதையடுத்து அங்கு நிலை கொண்டுள்ள இந்திய ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். காலை 6.30
மணிக்கு, ஜம்மு-காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மெந்தார்

பிரிவில் தாரி டாப்சி என்ற இடத்தில் உள்ள பில்லி மற்றும் நோவல் ஆகிய எல்லை பகுதிகளிலேயே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர்

ஆட்டோமேட்டிக் மற்றும் சாதாரண ஆயுதங்கள் கொண்டு இந்திய துருப்புகளை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய தரப்பில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படியான தாக்குதல்கள் கடந்த சில நாட்களாகவே இந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.பிரதமர் மன்மோகன் சிங், இம்மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேச உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை

தொடுத்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு விவகாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் இந்த சந்திப்பை உறுதிபடுத்தியுள்ளனர்.

இரு பிரதமர்களின் சந்திப்பின்போது இந்த விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது. எல்லைக்கு அருகே பேசப்பட்ட சமாதானப் பேச்சுக்களுக்கே சரியான ரெஸ்பான்ஸ் இல்லாத நிலையில், எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள நியூயார்க்கில் பேசும் பேச்சுக்கு என்ன ரெஸ்பான்ஸ் இருக்கப் போகிறதோ !

0 கருத்துகள்:

Post a Comment