அகமதாபாத் குண்டிவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தப்பியோடிதால் மும்பை முழுவதும் தேடுதல் வேட்டையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தொடர்
குண்டுவெடிப்புகளில் 50 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இந்த பயங்கரம் நடந்த மறுநாள், சூரத் நகரில் 22 குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இந்த குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்ட இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அப்சல் உஸ்மானி 2008ம் ஆண்டு ஒகஸ்ட் 27ம் திகதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டான்.
அகமதாபாத் மற்றும் சூரத்தில் தீவிரவாதிகள் குண்டுவைக்க திருட்டு கார்களை கொடுத்து உதவியதாக, அப்சல் உஸ்மானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
இந்த வழக்குகள் விசாரணைக்காக, மும்பை அழைத்து வரப்பட்டிருந்த அப்சல் உஸ்மானி நவி அங்குள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக தென் மும்பையிலுள்ள
மொக்கா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, அப்சல் உஸ்மானி மற்றும் 22 குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் தலோஜாவில் இருந்து வேனில் அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, தீவிரவாதி அப்சல் உஸ்மானி மட்டும் எப்படியோ மர்மமான முறையில் நீதிமன்றத்தில் இருந்து மாயமாகி விட்டான்.
சிறிது நேரத்துக்கு பிறகே பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிசாருக்கு அப்சல் உஸ்மானி மாயமானது தெரியவந்துள்ளது.
நீதிமன்ற வளாகம் முழுவதும் பொலிசார் தேடியும் உஸ்மானி சிக்கவில்லை.பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிசாரின் அலட்சியப்
போக்கினாலேயே அப்சல் உஸ்மானி தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
அவனை பிடிக்க மும்பை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே, அப்சல் உஸ்மானி தப்பியோட
பொலிசார் யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது
0 கருத்துகள்:
Post a Comment