ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி20 இரண்டு நாள் மாநாடு இன்று துவங்குகிறது.
இதில், தற்போது உலகில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகள், சிரியாவில் மக்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை மற்றும் அந்த நாட்டின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்கா கொண்டுள்ள போர் முஸ்தீபு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் புது தில்லியில் இருந்து புதன்கிழமை ரஷியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மாநாட்டுக்கு இடையே இந்தியா, ரஷியா, பிரேசில்
, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பிரத்யேகமாக சந்தித்து, வளர்ந்த நாடுகளால் கடந்த சில ஆண்டுகளாக வளரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைக் களைவதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்கின்றனர்.
2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ள அனைத்து ஜி20 மாநாடுகளிலும் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment