சூரிய மின்சக்தி பேனல் முறைகேட்டில் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் பதவி விலக வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் இரண்டு நாட்கள் நடந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் தன் வீட்டிலிருந்து முதல்வர் சாண்டி அலுவலகத்திற்கு செல்லும் போது, கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர் திடீரென கறுப்புக் கொடி காட்டினார்.
இதனை பார்த்த பொலிசார் குறித்த இளைஞரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர்.
அதில் ஒருவர் இளைஞரை எட்டி உதைத்து மயக்கமடையச் செய்தார்.
இதனை மறைந்திருந்த படம் எடுத்த நபர், தொலைக்காட்சிக்க கொடுத்து விட்டார்.
இக்காட்சிகள் ஒளிபரப்பாகவே, கம்யூனிஸ்ட்டுகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இளைஞரை தாக்கிய பொலிஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், உம்மன் சாண்டி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment