Search This Blog n

22 September 2013

தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டலாம் :


 
நடைபெற்ற தேர்தலின் மூலம், தமிழர்களுக்கு அரசியலில் முழு அதிகாரம் கிடைக்கும் என இந்திய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தேர்தல் அகதிகளாக உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வாய்ப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை அரசியல் சாசனப்படி, ராஜீவ்-­ ஜெயவர்தன ஒப்பந்தப்படி 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் வடக்கு பகுதியில், தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன்மூலம், இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும்.

இதன்மூலம் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முடியும். இதனால் அகதிகள் தங்களது நிலங்களையும், வீடுகளையும் மீட்க வழிசெய்யும். இது அகதிகளாக உள்ளவர்கள் மீண்டும் தங்களது தாயகத்துக்குத் திரும்ப வாய்ப்பாக அமையும்.

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு மீண்டும் அவை கிடைக்கும். தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், நேர்மையாக தேர்தல் நடத்திய இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

Post a Comment