வங்க தேசத்தவர்கள் மீது, பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் ஆதரவு வழங்கியிருந்தார்
. அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவின் அதிரடி நடவடிக்கைகளால் மிரண்டு போன அமெரிக்கா, இந்தியா மீது மும்முனை தாக்குதல் நடத்த திட்டமிட்டது' என பிரபல வரலாற்று அறிஞர், கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வரலாற்று ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ள புத்தகத்தில் எழுதியுள்ளதாவது:
பாகிஸ்தான், 40 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த
வங்கதேசத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு, அப்போதைய, அமெரிக்க அதிபர், ரிச்சர்டு நிக்சன், ஆதரவு அளித்தார். சட்ட விரோதமாக, ஆயுத உதவிகளையும் அளித்தார். இதற்கு உடந்தையாக, அப்போதைய அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் ஹென்ரி கிஸ்சிங்கர் இருந்தார். ஆனால், இந்திராவின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகளால் வங்கதேச மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த கிஸ்சிங்கர், இந்தியா மீது மூன்று விதமான தாக்குதல்களை நடத்த ஆயத்தமானார்.
அதாவது, சட்ட விரோதமாக, ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் வழியாக, பாகிஸ்தானுக்கு, அமெரிக்க படைகளை அனுப்புவது, இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க சீனாவுக்கு ரகசியமாக உதவுவது, வங்கக்கடலில்
, அமெரிக்க கடற்படை கப்பலை நிறுத்தி, அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என்பதே அந்த திட்டம்."இவற்றை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என, நிக்சனிடமும், கிஸ்சிங்கர் கேட்டுக் கொண்டார் என கேரி பாஸ் எழுதி உள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment