சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர், குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (75) தன்னை பலவந்தமாக கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
அவரது புகாரின்பேரில் சாமியார் மீது பொலிசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய பெண்ணுக்கு துஷ்ட ஆவிகளின் பாதிப்பு இருப்பதால் அவரை ஜோத்பூரில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மணாலியில் உள்ள ஹரி ஓம் ஆசிரமத்துக்கு அழைத்து வரும்படி பெண்ணின் தந்தையிடம் ஆசாராம் பாபு கூறியுள்ளார்.
கடந்த ஒகஸ்ட் மாதம் 15ம் திகதி மணாலி ஆசிரமத்தில் பேய் ஓட்டுகிறேன் என்று தனியறையில் வைத்து ஆசாராம் பாபு கற்பழித்து விட்டார் என்று அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 30ந் திகதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சாமியாரிடம் ஜோத்பூர் பொலிசார் சம்மன் அளித்தனர். ஆனால் சாமியார் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இந்தூரில் சாமியார் ஆசாராம் பாபுவை பொலிசார் கைது செய்தனர்.
அதன் பின்பு நேற்று மாலை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சாமியாரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசார் அனுமதி கேட்டனர். ஆனால், 1 நாள் பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார்.
ஒருநாள் மட்டும் பொலிஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், புகார் கூறிய பெண்ணையும், ஆசாராம் பாபுவையும் பொலிசார் நேற்றிரவே மணாலி ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சம்பவத்தன்று ஆசாராம் பாபு தன்னிடம் எப்படியெல்லாம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பதை பாதிக்கப்பட்ட மாணவி விளக்கி கூறினார். அருகிலிருந்த ஆசாராம் பாபு அந்த பெண் கூறியதை எல்லாம் திடமாக மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆசாராம் பாபுவை ஆண்மை சோதனைக்கு பொலிசார் அழைத்து சென்றனர். அவர் முழு ஆண்மைத் தன்மையுடன் உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
எனவே கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணிடம் அவர் தவறான முறையில் நடந்து கொண்டிருக்கலாம் என்பதை பொலிசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆசாராம் பாபுவின் விசாரணை காவல் இன்று மாலையுடன் முடிகிறது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, விசாரணை காவலை நீட்டிக்கும்படி பொலிசார் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
0 கருத்துகள்:
Post a Comment