இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும், பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர்.
இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும், பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர். நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை, பிரவீனா கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
0 கருத்துகள்:
Post a Comment