சனா பிரிஸ்கி, ரோஸ் காப்மன் ஆகியோர் இயக்கிய இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளிகளின் எட்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆஸ்கர் விருதினையும் தட்டிச் சென்றது.
இதில், அவிஜித் ஹல்டர் என்ற 14 வயது சிறுவன் தங்கள் பகுதியைப் பற்றி சில புகைப்படங்களை எடுத்துத் தந்திருந்தான். சில புகைப்படங்கள் அவனுடைய வீட்டிலேயே கூட எடுக்கப்பட்டிருந்து. இந்த டாக்குமெண்டரி திரைப்படத்தை தயாரித்தவர்கள் இந்த சிறுவர்களின் கல்விச் செலவிற்காக 'கிட்ஸ் வித் கேமராஸ்' என்ற தொண்டு அமைப்பினை நிறுவினர்.
கொல்கத்தாவிலும், நியூயார்க் நகரில் உள்ள சோதேபி ஏல நிறுவனத்திலும் இந்த சிறுவர்கள் எடுத்த புகைப்படங்கள் விற்கப்பட்டு நிதி திரட்டப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு புகைப்பட போட்டிக்கு கூட அவிஜித் ஹல்டர் அழைக்கப்பட்டிருந்தான். இந்த நிதியின் மூலம் எட்டு சிறுவர்களும் அமெரிக்காவில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்
.
2005 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்ற ஹல்டர் கடந்த ஆண்டு நியூயார்க் பல்கலைக்கழகம் ஒன்றில் தனது பட்டப்படிப்பை முடித்தான். இந்தக் கல்வி அவனுக்கு திரைப்படத் துறைக்கான வாய்ப்பையும் அளித்தது.
ஹாலிவுட் நட்சத்திரங்களான டொனால்ட் சதர்லாந்தும், ப்ரே லார்சனும் இணைந்து நடித்துள்ள 'பாஸ்மதி புளூஸ்' என்ற இசைத் திரைப்படத்திற்கு ஹல்டர் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.
இந்தப் படம் இந்திய விவசாயிகளின் அறியாமையை அமெரிக்க மரபியல் நிறுவனம் ஒன்று எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்கின்றது என்பது குறித்த கதையாகும். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், வரவிருக்கும் தசரா கொண்டாட்டங்களின்போது கொல்கத்தாவிற்கு வந்து தனது பாட்டியுடனும், சகோதரியுடனும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அந்த 22 வயது இளைஞன் ஏங்குகின்றார்
0 கருத்துகள்:
Post a Comment