Search This Blog n

15 September 2013

மாணவியை மனைவியாக்கிய ஆசிரியர் !!


தமிழ்நாட்டில் தன்னிடம் படித்த மாணவியின் திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை மனைவி என்று ஆசிரியர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை சுண்ணாம்பிருப்பை சேர்ந்த மகேந்திரன். இவர் உச்சநீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் நானும், ஜெயராமன் மகள் மகாலட்சுமியும் காதலித்தோம்.
இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு ஜெயராமன் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பை மீறி இருவரும், திருப்பத்தூர்

பூமாயி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் வேலைக்காக நான் மலேசியா சென்றேன். மலேசியாவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினேன்.

அப்போது மகாலட்சுமியை அவரது தந்தை கடத்திச் சென்றதும், அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதும் தெரியவந்தது.
மனைவியை மீட்கக்கோரி செப்டம்பர் 5ல் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மகாலட்சுமியை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், துரைச்சாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் முன் மகாலட்சுமியை, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆஜர்படுத்தினர்.
மகாலட்சுமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக நீதிபதி

களிடம் மகாலட்சுமி கூறுகையில்,எனக்கு தற்போது 25 வயதாகிறது.
திருப்பத்தூரில் வசித்து வருகிறேன். மனுதாரர் மகேந்திரன் டியூஷன் சென்டர் நடத்துகிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது அவரிடம் டியூஷன் படித்தேன்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னை துன்புறுத்தினார்.

எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அவர் மீது திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

இதனைத் தொடர்நது எனக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கமாட்டேன் என பொலிசில், மகேந்திரன் எழுதி கொடுத்தார்.
எனக்கு 15ம் திகதி திருமணம் நடக்க உள்ளது. என் திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக மனுதாரரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டி வருகின்றனர்.

எனவே என் திருமணத்திற்கும், குடும்பத்தினருக்கும் போதிய பொலிஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். எனக்கும், மகேந்திரனுக்கும் திருமணம் நடைபெறவில்லை.

உள்நோக்கத்துடன் எங்களுக்கு திருமணம் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார் என்றும் என்னை பெற்றோருடன் செல்ல அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வினோத வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மகாலட்சுமி மேஜர். அவர் விருப்பப்படி பெற்றோருடன் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
தன் திருமணத்தை கெடுக்க சதி நடப்பதாக மகாலட்சுமி அச்சம் தெரிவித்துள்ளார். அவரது திருமணத்திற்கு பொலிசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்.

திருமணம் முடிந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களுக்கு பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment