புதுடெல்லி: ஐஆர்சிடிசி இணையதளத்தில் நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில், அதன் வேகம் அதிகரிக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்யா பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகம் போதுமானதாக இல்லை. தற்போது ஒரு நிமிடத்தில் 2,000 டிக்கெட்டுகளை மட்டுமே இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியும்.
இந்நிலையில் இதை மாற்றி, நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும், இதற்காக அதிநவீன சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ரயில்வே இணை அமைச்சர் கோட்லா ஜெயசூர்யா பிரகாஷ் ரெட்டி, 'விரைவில் நிமிடத்துக்கு 7,200 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment