திருநெல்வேலியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவதில் காவல்துறையினர் அத்துமீறியதைக் கண்டித்து புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நெல்லையில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. இதனால், நெல்லையில் பல இடங்களில் பிரச்னைகள் எழுந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை நெல்லையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment