டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்வது குறித்த விசாரணையை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் துவங்குகிறது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் மைனர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் மைனருக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
மீதமுள்ள 5 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் முகேஷ்(26), அக்ஷயம் குமார்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 13ம் திகதி தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி யோகேஷ் கன்னா இந்த தீர்ப்பை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி அந்த 4 பேரின் மரண தண்டனையையும் உறுதி செய்வது தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று துவங்குகிறது
0 கருத்துகள்:
Post a Comment