தமிழ்நாட்டில் பெண் ஊழியர் விடுமுறை எடுத்ததற்காக கோபப்பட்டு அவரை 3 முறை பலமாக குட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் கெங்கு ரெட்டி ரோட்டில் கார்கோ இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது.
அங்கு மேலாளராக இருப்பவர் ரவி சைதன்யா. இவருக்கு வயது 24தான் ஆகிறது. இதே நிறுவனத்தில் ரதி தேவி என்ற 23 வயது பெண் ஊழியர் பணியாற்றுகிறார்.
திருமணமாகாத இவர் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழுதபடி வந்த ரதிதேவி. அங்கு ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் மேற்கண்ட நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்தேன். தற்போது ஒரு வாரம் விடுமுறை எடுத்தேன்.
விடுமுறை முடிந்து வேலைக்கு வந்தேன். அப்போது மேலாளர் ரவிசைதன்யா, நான் விடுமுறை எடுத்ததை கண்டித்து தகாத வார்த்தைகளால் திட்டினார்.
பின்பு திடீரென்று எனது தலையில் 3 முறை குட்டினார். பலமாக குட்டியதால் தலையில் வலி ஏற்பட்டது. நான் கதறி அழுதும் கூட இரக்கமே இல்லாமல் திட்டியபடி இருந்தார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரதிதேவி புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சைதன்யாவை இரவோடு இரவாக கைது செய்தனர்.
0 கருத்துகள்:
Post a Comment