Search This Blog n

24 March 2016

நான் தலைவரை பார்க்கப் போகவில்லை என் தந்தையை பார்க்க சென்றேன்!

கருணாநிதி மு.க.அழகிரி திடீர் சந்திப்பு அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்ற துறை தயாநிதி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
மக்கள் நல கூட்டணியில் தற்போது விஜயகாந்த் இணைந்துள்ள நிலையில், அக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுக கூட்டணியில் தான் இருப்பதை உறுதிபடுத்தினார். மேலும் பாஜக 
அடுத்த கட்ட 
ஆலோசனையில் மிக தீவரமாக இறங்கியுள்ளது. தமிழ் மாநில காங்கிரசின் முடிவு ஓரிரு நாளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமாகா-வை மக்கள் நல கூட்டணியில் இழுப்பதற்கு தீவரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், தேமுதிகவின் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்த திமுகவுக்கு இந்த திடீர் அரசியல் மாற்றம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் 
தெரிவிக்கின்றனர்.
 இதனிடையே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் திடீர் என்று சந்தித்துள்ளார். இதில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என்று திமுகவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், 
மு.க.அழகிரியை 
கட்சியில் மீண்டும் இணைப்பது தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக 
கருதப்படுகிறது.
இதனிடையே மு.க.அழகிரி கருணாநிதி சந்திப்பு தொடர்பாக கருத்து கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த சந்திப்பு தந்தை மகன் இருவருக்கான சந்திப்பாக மட்டுமே தான் அறிவதாக கூறியுள்ளார். மு.க.அழகிரியின் மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதியை அழகிரி சந்தித்ததில் 
எந்த அரசியல் 
உள்நோக்கமும் இல்லை என்று தனது தந்தை கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் 
எழுந்துள்ளது!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment