சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட 12 இந்தியப் பிரஜைகள் காத்தான்குடி பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை விசாரித்த மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் இவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களிடம் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட இலேகியம் ,எண்ணெய்,தூள் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளை இரசாயன பகுப்பாய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்
உத்தரவிட்டார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேரும் இந்தியாவின் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வீசாவில்
இலங்கைக்கு
வருகைதந்தவர்கள் எனவும் இவர்களில் 40 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களும்,7ஆண்களும் அடங்குகின்றனர் எனவும் கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கி இருந்தாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment