Search This Blog n

09 March 2016

வேக கட்டுப்பாடு கருவி: வாகனங்களில் ஏப்.,1 முதல் கட்டாயம் !!!

விருதுநகர்: சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி , ஏப்.,1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.
 விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு 
கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.இலகு ரக வாகனங்கள்:
ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது கார்,லாரி, வேன் உட்பட கனரக வானங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் என ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தகுதி சான்றிதழ்:
இச்சட்டம் வரும் ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த சில வாரங்களாக வட்டார போக்குவரத்து துறை சார்பில் தகுதி சான்றிதழ்களுக்கு(எப்.சி.,) வரும் லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கட்டாயப்படுத்தி 
வருகின்றனர். வேக கட்டுப்பாடு கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டுமே தகுதி சான்றிதழ்களும் வழங்கி வருகின்றனர். வேக கட்டுப்பாடு கருவி 
பொருத்தும் வாகனங்கள் அதிகபட்சம் 80 கி.மீ., வேகத்திற்கு மேல் போக முடியாது. இதனால் விபத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது. வேககட்டுப்பாடு பொருத்தாத வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதை தொடர்ந்து தற்போது வாகனங்கவாகனங்க ளில் வேககட்டுப்பாடு கருவி பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன:
                                          
                                                               

0 கருத்துகள்:

Post a Comment