Search This Blog n

12 March 2014

சேவலை பிடிக்க போய் கிணற்றில் சிக்கிய பாட்டி

 தேனி மாவட்டத்தில் சேவலை பிடிக்க சென்ற மூதாட்டி கிணற்றில் உதவிக்கு யாருமின்றி தவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ளது அனுமந்தன் பட்டி பேரூராட்சியின் உட்கடை பகுதியான காக்கில் சிக்கையன் பட்டி ஊரை சேர்ந்தவர் சின்னச்சாமி. அவரது மனைவி பார்வதியம்மாள் ( 80) இவர் சேவல் வளர்த்து வருகிறார். ஆசையாக வளர்த்த சேவல் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.

வேதனை அடைந்த பார்வதிம்மாள் சேவலை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஊரின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சேவல் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சேவலை பிடிக்க பேரன்களிடம் பார்வதி அம்மாள் கூறினார். அவர்கள் கிணற்றில் இறங்க மறுத்துள்ளனர்.

ஆசையாக வளர்த்த சேவலை பிடிக்க முடியவில்லையே என்று வேதனைப்பட்ட பார்வதி அம்மாள் நேற்று மதியம் கிணற்றின் படி வழியாக இறங்கியுள்ளார். சேவல் ஒவ்வொரு படியாக கீழே இறங்கியது. சேவலும் இறங்க, மூதாட்டியும் கீழே இறங்கினர். நேரம் ஆகஆக இருள் சூழ்ந்தது.

சேவலையும் பிடிக்க முடியவில்லை. மேலே ஏறவும் முடியவில்லையே என அவர் தவித்தார். இதனால் கிணற்றில் இருந்தவாறு கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை காயம் இன்றி மீட்டனர். மேலே வந்த மூதாட்டி

சம்பவ இடத்திற்கு வந்த சப்–இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியனிடம் கிணற்றில் உள்ள சேவலை பிடித்து தரவேண்டும். இல்லை என்றால் மீண்டும் கிணற்றில் இறங்குவேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இரவு நேரம் என்பதால் சேவலை பிடிக்க முடியாது காலையில் சேவலை பிடித்து தருகிறோம் என்று உறுதி அளித்த பின்னர் மூதாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
 

0 கருத்துகள்:

Post a Comment