Search This Blog n

01 March 2014

வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் லட்சுமி என்ற காட்டுமாடு ஆண் கன்றை சனிக்கிழமை (பிப்.22) ஈன்றது.
இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு சனிக்கிழமை ஆண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்து வளர்ந்த ரத்தினம் என்ற 9 வயது ஆண் காட்டு மாட்டுக்கும் 5 வயதான லட்சுமி என்ற பெண் மாட்டுக்கும் இந்த கன்று பிறந்துள்ளது.

புதிதாக பிறந்துள்ள இக்கன்றுடன் சேர்த்து பூங்காவிலுள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 8 ஆண் மற்றும் 6 பெண் என மொத்தம் 14-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கன்று ஈன்றுள்ள தாய்க்கு சிறப்பு உணவுகளாக தேங்காய், புண்ணாக்கு, வாழைப்பழம், கீரை முதலியவை வழங்கப்படுகின்றன.

காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக புதிய பேறுகால பராமரிப்பு இருப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கன்று ஈனும் நிலையில் உள்ள காட்டு மாடு இந்த இருப்பிடத்தில் வைத்து பராமரிக்கப்படும்.

பிரசவத்துக்குப் பிறகு, கன்று நன்கு வளர்ந்த நிலையில் தாயும் சேயும் இதர காட்டு மாடுகளின் மந்தையுடன் சேர்க்கப்படும்.

இதனால் வளர்ந்த ஆண் காட்டு மாடு இனப்பெருக்க காலத்தில் கொம்பால் முட்டுதல் மற்றும் மிதிக்க முயற்சித்தல் போன்றவற்றிலிருந்து கன்றுக் குட்டி எளிதாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

Post a Comment