Search This Blog n

24 February 2014

மயங்கிய மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவனை நடிப்பதாக கூறி காலால் எட்டி உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள ஆலந்தூர் ஊராட்சி, செட்டி குளத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் மிதின் குமார் ( 13). அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மிதின் குமார் தனது நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
அப்போது அங்கு வந்த தமிழ் ஆசிரியர் வெங்கடேசன் (37), மாணவரை பார்த்து மயங்கியது போல் நடிக்கிறாயா எனக்கேட்டு கன்னத்தில் அடித்து காலால் மிதித்துள்ளார். இதனால் அழுத படி வீட்டுக்கு வந்த மிதின் குமார் இது குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளான்.
இதையடுத்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் ஆசிரியர் வெங்கடேசனிடம் மாணவன் தாக்கப்பட்டது குறித்து விசாரித்தனர். அவர்களையும் ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து மிதின்குமாரின் பெற்றோர் பாடாலூர் பொலிசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த பொலிசார், ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆசிரியர் வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment