நியூயார்க் : அமெரிக்காவில், குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி, கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில், நியூயார்க் அருகே உள்ள, நியூஹெவன் பகுதியில் வசிப்பவர்கள் சிவகுமார், 33. இவரது மனைவி தேன்மொழி, 24. இவர்களது, 19 மாத ஆண் குழந்தை அதியன்.
இவர்கள் வீட்டு பணிப்பெண் கிஞ்சால் படேல், 27. கடந்த மாதம், 16ம் தேதி, குழந்தை ஓயாமல் அழுததால், பணிப்பெண் கிஞ்சால், அதியன் தலையை தரையில் மோதச் செய்தார். இதில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்தது. கடந்த, 26ம் தேதி, குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து, பணிப்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த குழந்தையை உரிய முறையில் பராமரிக்க தவறியதற்காக, தேன்மொழி மீதும், சிவகுமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களும் கைதாகியுள்ளனர்.

0 கருத்துகள்:
Post a Comment