ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பாரத்பூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மருத்துவக் கல்வி படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சக மாணவர்கள் 3 பேர் இவரை ஜெய்ப்பூர் பிரதாப் நகருக்கு வரவழைத்து, அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மயக்கமடைந்த மாணவியை கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி, நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சங்கனர் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில், மாணவியின் கற்பை சூறையாடியது விஜயகுமார், யோகேந்திர குமார் மற்றும் வீரேந்திர குமார் என்பது தெரியவந்தது. மேலும், குற்றவாளிகளில் ஒருவன், அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துவிட்டு பின்னர் மறுத்து விட்டதால் அவர் நீதிமன்றம் சென்றதும் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:
Post a Comment