வவுனியா பம்பைமடு கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிவரை வவுனியா நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா விசாவில் வருகை தந்த இந்தியரான எஸ். குணசேகர் என்பவரே வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் நேற்று (8.2.14) மதியம் பம்பைமடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இவர கடந்த 10 நாட்களாக வவுனியாவில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இன்று (9.2.14) காலை வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment