அம்மா உணவகங்களில் இந்த மாதம் முதல் சப்பாத்தி உணவினை அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 200 வார்டுகள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் சப்பாத்தி வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது சப்பாத்தி வழங்கவில்லை.
சப்பாத்திக்கு மாவு பிசையும் எந்திரம் மற்றும் அதற்கான பொருட்கள் அனைத்தும் தற்போது தயாராக உள்ளது. எனவே, இந்த மாதம் அம்மா உணவகங்களில் சம்பாத்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகிற 19ம் திகதி அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு 1 ஆண்டு ஆகிறது. இந்த நாளில் சப்பாத்தி வழங்கலாமா? அல்லது முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் திகதி சப்பாத்தி வழங்கலாமா? என்றும் ஆலோசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மகப்பேரு மருத்துவமனை, எழும்பூர் குழந்தை நல மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment