Search This Blog n

18 February 2014

வாலிபரை கடித்துவிட்டு உயிர் போவதை காத்திருந்து ரசித்த பாம்பு!

 மத்திய பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அமருஜாலா பகுதியில் தனது குடும்பத்தோடு உறங்கிக்கொண்டிருந்த நபரை நள்ளிரவில் பாம்பு ஒன்று கடித்துள்ளது.
உடனடியாக பாம்பு கடித்தவரின் மனைவி தனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் வீட்டின் வாசலின் அருகே நடு வழியில் நின்ற பாம்பு அவர்களை வெளியே செல்ல விடவில்லை. அவர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தும் பாம்பு அங்கிருந்து திரும்பவில்லை.
உடனடியாக அந்த பெண் வீட்டின் மற்றொரு பகுதியை இடித்து பார்த்துள்ளார். ஆனால் இடிக்க முடியவில்லை. முழு இரவும் அங்கேயே இருந்த பாம்பு மறுநாள் காலையிலும் அங்கிருந்து செல்ல மறுத்துள்ளது.

இதற்கிடையே மிகவும் முடியாத நிலையில் இருந்த கணவரை காப்பாற்ற அந்த பெண் வீட்டின் சுவரை இடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் உயிர் பிழைக்காமல் இறந்துவிட்டார்.

 

0 கருத்துகள்:

Post a Comment