Search This Blog n

29 August 2015

சர்வதேச திரைப்பட விழாவில் மணிரத்தினத்துக்கு விருது

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்துக்கு லண்டன் - இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது. பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில்
 நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்தினத்தின் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 
தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர் இயக்குநர் மணிரத்தினம் கருத்துத் தெரிவிக்கையில் - 
இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். லண்டனில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது இந்த நூற்றாண்டின் புதிய அத்தியாயம். தற்போதைய சூழலில் இந்திய சினிமா புதிய பரிமாணங்களைத் 
தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற 
விருதுகள் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். இந்த விருதை இனி வரும் காலங்களில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன்
 என்றார். நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு மனிதநேயமிக்க உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தின் போது மனிதாபிமான பணிகளை மேற்கொ
ண்டு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டதால் நடிகை என்பதைவிட மேன்மையான பெண்மணி என்பதை நிரூபித்து 
விட்டார் என அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. பாலிவுட் நடிகர் சூரஜ் சர்மாவுக்கு இளம் தலைமுறை நடிகர்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் 'உம்ரிக்கா' படத்துக்காக பெற்றார். தமிழில் வெளிவந்த '
காக்கா முட்டை', ஹிந்திப் படமான 'நாச்சோமியா கும்பஸார்' ஆகிய இரு படங்களுக்கும் பார்வையாளர்களைக் கவர்ந்த திரைப்படத்துக்கான பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன. சத்யஜித் ரே பெயரில் வழங்கப்படும் குறும்பட விருதை 'கர்கோஷ்' என்ற குறும்படம் பெற்றது. - 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment