உரிய பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் மண்டபம் பிரதேசத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அப்துல் ஹக் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல உள்ளுர் முகவர் மூலம் படகு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டு, மண்டபம் காத்திருந்த போது, காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் ஹக் இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பிரதேசத்தில் இஸ்லாமிய மதரசா ஒன்றில் பயற்சிகளை பெற்றுள்ளதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
தாய் மரணமடைந்த செய்தியை கேள்வியுற்ற அப்துல் ஹக் இலங்கை செல்ல முயற்சித்துள்ளார். அவரிடம் செல்லுப்படியான கடவுச்சீட்டு இல்லாத நிலையில், சட்டவிரோதமாக இலங்கை
செல்ல தீர்மானித்துள்ளார்.
இதற்காக மண்டபம் பிரதேசத்திற்கு வந்த அவர், முகவர் ஒருவருக்கு 37 ஆயிரம் ரூபாவை கொடுத்து இலங்கைக்கு செல்ல படகை ஏற்பாடு செய்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment