இந்தியா - அமீரகம் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), சென்றுஉள்ள பிரதமர் மோடி அபுதாபியில் மஸ்தார்நகர் பகுதியினை பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மஸ்தார் நகரில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், குறித்து வல்லுனர்களிடம் கேட்டு அறிந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி காரில் பயணம்
செய்தார். பிரதமர் மோடி, தனது வருகையை பதிவுசெய்யும் விதமாக அங்கிருந்த மின்னணு பலகையில் கையெழுத்திட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். மஸ்தாரில் பிரதமர் மோடி முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-அமீரகம் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று கூறினார்.
இந்தியா - அமீரகம் இடையே கணக்கிட முடியாத அளவில் விமானங்கள் இயக்கப்படுகிறது, ஆனால் இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருவதற்கு 34 ஆண்கள் ஆகிஉள்ளது.
இந்தியாவில் 7 வருடங்களில் குறைந்த செலவில் 50 மில்லியன் வீடுகளைகட்ட நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் ஒருட்ரிலியன் டாலர் மதிப்பில் முதலீடுகள் செய்வதற்கான உடனடி சாத்தியம் உள்ளது. இந்தியாவில் தற்போது நிலையான அரசு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அமீரகத்தில் இருந்து முதலீடுகளை நான் விரும்புகிறேன்.
உலகவங்கி, சர்வதேச நாணய நிதியகம் இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்று ஒத்துக்கொண்டு உள்ளது. என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடியின் பேச்சின் போது மேலும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது.
நேற்று வரையில், இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருவதற்கு 34 ஆண்டுகள் ஆனதை நினைத்ததாகவும், வெட்கமாக உணர்வதாகவும் பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment