தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும் தங்கத்துடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சுங்கப் பிரிவின் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து இந்த இரண்டு இலங்கையர்களும் இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
200 கிராம் எடையுடைய நான்கு தங்க பிஸ்கட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கால்களில் போலியாக பென்டேஜ்களை சுற்றி அதனுள் தங்கத்தை மறைத்து கடத்தியுள்ளனர்.
தங்கத்தை சென்னைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய இவர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment