+சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த விமானம் மீது பச்சை நிற ஒளிக்கதிர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 174 பயணிகள், 7 விமான சிப்பந்திகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
அப்போது விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, அருகில் உள்ள பரங்கிமலை உச்சியில் இருந்து பச்சை நிற ஒளிக்கதிர் விமானத்தின் முன் பகுதியில் உள்ள கண்ணாடியில் விழுந்தது.
விமானத்தை தரை இறக்குவதற்காக முழு கவனத்துடன் இருந்த விமானிக்கு, திடீரென பச்சை நிற ஒளிக்கதிர் விழுந்ததால் அவரது கவனம் திசைதிரும்பியது.
ஆனாலும், அவர் திறமையாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் ஓட்டியுள்ளார். அந்த ஒளிக்கதிர் 30 நொடிகள் ஒளிர்ந்து மறைந்தது.
விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அதுபற்றி தகவல் கொடுத்தார்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், நீண்ட நேரம் ஆய்வு செய்தும், ஒளிக்கதிர் வந்தது பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை.
0 கருத்துகள்:
Post a Comment