Search This Blog n

18 August 2015

மொத்தமாக 250 விமானங்களைஆர்டர் செய்து இண்டிகோ நிறுவன

இண்டிகோ விமான சேவை நிறுவனம் புதிதாக 250 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 
இந்தியாவின் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்கும்விதமாக ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ ரக விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
இந்த ஆர்டர் உலக விமானப் போக்குவரத்து துறையிலேயே, எண்ணிக்கையில் மிகப்பெரிய ஆர்டராக கூறப்படுகிறது.
இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்கான முக்கியப் பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்த 26 பில்லியன் டாலர் ஒப்பந்தம்,
இந்நிறுவன மதிப்பை உயர்த்த உறுதுணையாக இருக்கும். மேலும் இதற்கான விண்ணப்பங்களைச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுவரை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து இண்டிகோ நிறுவனம் சுமார் 530 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment