நாகர்கோவில் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறையை வெட்டி கடத்திய குற்றச்சாட்டில் குமரியை சேர்ந்த நான்கு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறை வெட்டிக்கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மாநில கியூ பிரிவு பொலிஸார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நான்கு பேர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பொலிஸார் சோதனை நடத்திய போது சாக்குமூடைக்குள் 20 கிலோ பவளபாறை துண்டுகள் இருந்தது.
விசாரணையில் இவர்கள் குமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வகுமார், ஆனந்தராஜா, பார்த்திபன், திவாகர் என்பது தெரிய வந்தது.
விழிஞ்ஞம் கடற்பகுதி நாகர்கோவில் வனகோட்டத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவர்கள் களியல் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment