Search This Blog n

24 September 2012

ஜெனீவாவில் தற்போது நடைபெறும் பொங்கு தமிழ்: பெரும் மக்கள் கூட்டம் !

24.09.2012.ByRajah.ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.

பின்னர் அகவணக்கம் இடம்பெற்று ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்குதமிழ் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் பிரான்சு இனியம் நடனக்குழுவினரின் கலாச்சார நடனம் மற்றும் பொங்குதமிழ் எழுச்சி நடனங்களுடன் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழரல்லாத வேற்றினப் பிரதிநிதிகளும் சிறப்புரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வின் சிறப்பு வெளியீடாக எட்டுக் கவிஞர்களின் உணர்வுக்கவியில் ஏழு இசையமைப்பாளர்களின் எழுச்சி இசையில் இயக்குனர் வ.கௌதமனின் நெறியாள்கையில் உணர்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் மேற்பார்வையில் உருவான �வெல்வது உறுதி� எனும் இறுவெட்டு வெளியிடப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக கொட்டும் மழையிலும் வாட்டும் குளிரிலும் மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடனும் உறுதியுடனும் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர். கடந்த 18.05.2009ன் பின் ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்ட ஓர் மாபெரும் மீளெழுச்சியாகவும் பேரெழுச்சியாகவும் இப் பொங்குதமிழ் நிகழ்வு அமைந்திருந்ததாகவும் எமது விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்விற்கு மக்கள் தாம் தயாராகி விட்டதை சர்வதேச உலகிற்கு இடித்துரைத்திருக்கிறார்கள் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் கூறினர்.








 

0 கருத்துகள்:

Post a Comment