Search This Blog n

26 September 2012

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்: இராஜதந்திரிகள் கோரிக்கை

 
 
26.09.2012.By.Rajah.இலங்கை – சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சமநிலையில் பேண வேண்டும் என்று ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே சீனாவிடம், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா இழந்து விட்டது.
இந்த நிலையில் இலங்கையையும் இழப்பதை இந்தியா விரும்பவில்லை.
இதற்கான முழு நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசியல் இலாப நோக்கம் இன்றி, இரண்டு நாடுகளுடனும் சுமூக உறவினை முன்னெடுப்பதே இராஜதந்திரமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவோ, சீனாவோ இலங்கையை கைவிடுவது என்பது, இலங்கைக்கே ஆபத்தானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment