Saturday29September2012.By.Rajah.கிளிநொச்சி-கொக்காவில் பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கனரக வாகனம் மோதியதில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்வம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த தம்பிராசா எழில்வேந்தன்(வயது19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். வாகனங்களை மறித்து விட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னால் வந்த பக்கோ கனரக வாகனம் இளைஞரின் மீது மோதி அவர் மீது ஏறியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். தற்போது இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணை களை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை வீதிப்புனரமைப்பினால் இடம்பெற்ற 4வது விபத்துச்சம்பவமும், உயிரிழப்புச் சம்பவமும் இதுவாகும், இதற்குக் காரணம் வீதிப்புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள் ள தென்னிலங்கை நிறுவனங்கள் போதியளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்வதில்லை.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸாரும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் கூட நடவடிக்கை எடுப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்ததக்க விடயமாகும்.

0 கருத்துகள்:
Post a Comment